Social Activity

ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்த திட்டமிடப்படுகிறது

பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவீத மாணவர்களே வகுப்புகளில் இருக்கும் வகையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்புகள் நடத்த திட்டமிடப்படுகிறது.

இந்த நிலையில் சாலைகளில் ஒத்த இரட்டை இலக்க போக்குவரத்தை நடத்த இதுபோல் வகுப்பறைகளிலும் இந்த முறையை பின்பற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது தேசிய கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி மையமான NCRT இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது.

அடுத்த வாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பள்ளிகளுக்கான சமூக இடைவெளியுடன் கூடிய கல்வி தொடர்பான விதிமுறைகளை அறிவிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கல்வியில் சமரசம் செய்யாமல் அதே வேளையில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு கல்வித்துறை சார்பில் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top