Uncategorized

கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்.. நவம்பர் 5-ம் தேதிக்குள் வங்கிகள் உங்களுக்கு பணம் செலுத்தும்..!!

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் மோடி அரசிடமிருந்து கடன் வாங்கியவர்களுக்கு மிகப்பெரிய பண நிவாரணம் கிடைத்துள்ளது.

கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான ஆறு மாத தடை காலத்திற்கு ரூ .2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ததை அமல்படுத்துமாறு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களையும் ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் “அனைத்து கடன் வழங்கும் நிறுவனங்களும் திட்டத்தின் விதிகளால் வழிநடத்தப்படவும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தேவையான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank) ரூ .2 கோடி வரையிலான கடன்களுக்கான வட்டிக்கு வட்டி திட்டத்திற்கான தொகை வித்தியாசத்தை செலுத்துவதற்கான மத்திய அரசின் திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, நவம்பர் 5 ஆம் தேதிக்குள் கடன் வாங்கியவர்களின் கணக்குகளில் பணம் செலுத்தும் பணியை முடிக்குமாறு கடன் வழங்கும் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இந்த திட்டத்தின் படி, மார்ச் 27, 2020 அன்று ரிசர்வ் வங்கியால், கடன் வாங்கியவர் கடன் திருப்பிச் செலுத்துவதில் அளிக்கப்பட்ட சலுகையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்படுத்தியிருந்தாலும், அதைப் பற்றி பொருட்படுத்தாமல், குறிப்பிட்ட காலத்திற்கான கூட்டு வரி மற்றும் தனி வரியின் வித்தியாசத் தொகையை, கடன் வழங்கும் நிறுவனங்கள் அந்தந்த வங்கிக் கணக்குகளில் செலுத்த வேண்டும். இந்த வட்டிக்கு வட்டி தொகையை வரவு வைத்த பிறகு கடன் வழங்கும் நிறுவனங்கள் மத்திய அரசிடமிருந்து தொகையை திரும்பப் பெறலாம்.

முன்னதாக கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து தொழில்களும் முடங்கியதால், பலர் வேலை, வருமானம் இன்றி தவித்த நிலையில், இந்த காலக் கட்டத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்து இஎம்ஐ செலுத்துவதற்கு ரிசர்வ் வங்கி 6 மாதம் கால அவகாசம் வழங்கியது. இதனைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தவணைக் காலத்திற்குக் வட்டிக்கு வட்டி விதிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் ரூ 2 கோடி வரையிலான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற அறிவிப்பை மத்திய அரசு கடந்த 23 ஆம் தேதி வெளியிட்டுருந்தது. இந்நிலையில் இந்த 6 மாத தவணைக் காலத்தில், வங்கிகள் வசூலித்த வட்டிக்கு வட்டி தொகையை திருப்பி செலுத்த ரிசர்வ வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வீட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட ரிசர்வ் வங்கியின் ஒழுங்குபடுத்தப்பட்ட கடன் வழங்குநர்கள் இத்திட்டத்திற்கு தகுதியுடையவர்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com