Social Activity

கனமழை அலெர்ட்.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் மிக கனமழையும், 9 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

மேலும் அடுத்த 3 மணி நேரத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, கறம்பகுடி வட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அவசர கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதில், கனமழையால் ஏற்படும் எந்த தேவையையும் சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகங்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், பேரிடர்களை கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு முறைகளை கடைப்பிடிக்கவும் அக்கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் மாதம் வரை தமிழகம், புதுவை, காரைக்கல் பகுதிகளில் இயல்பை விட 43% குறைவாக பதிவாகி உள்ளது. பதிவான மழையின் அளவு 98 மி.மீ ஆனால் இந்த காலகட்டத்தின் இயல்பான அளவு 171 மி.மீ ஆகும். கடந்த 123 ஆண்டுகளில் 9ஆவது முறையாக குறைவான அளவு மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாகவும், 6 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 16 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும், 17 மாவட்டங்ங்களில் இயல்பை விட மிக குறைவான அளவு மழையும் பதிவாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top