GOVT JOBS

கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஆட்கள் தேவை.!

கொரோனா தடுப்பு பணியில் தமிழக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழக காவல்துறையினருடன் இணைந்து பணியாற்ற மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான முக்கிய பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அது மிகவும் ஒரு சவாலான பணியாக காவலர்களுக்கு இருக்கின்றது. ஊரடங்கை மீறி வெளிய வருபவர்களை கட்டுப்படுத்துவது, கொரோனா பரவலை தடுப்பதற்கு பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இந்த கொரோன தடுப்பு பணி என்பது மிகவும் சவாலாக இருக்கும் நிலையில், தங்களையும் இந்த பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஓய்வுபெற்ற மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றியவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார்கள். அந்த கோரிக்கையை தமிழக காவல்துறை டிஜிபி- க்கு அனுப்பப்பட்டது. பின்னர் அந்த கோரிக்கைக்கான ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை முடிந்து தற்போது, கொரோனா தடுப்பு பணியில் பணியாற்ற மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு தமிழக காவல்துறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய 40 முதல் 50 வயதிற்குக்குட்பட்ட வீரர்கள் அவரவர் வசிக்கக்கூடிய மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாநகர ஆணையாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட ஆட்கள் தேவை என்பதால் ஓய்வுபெற்ற வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டள்ளது என்று தமிழக காவல்துறை கூறியுள்ளது. இதற்கு முன் தேர்வாகி பயிற்சியில் இருக்கும் காவலர்கள் உடனடியாக பணியில் சேர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயிற்சியில் இருக்கும் 8538 பேரும் மே 3ம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top