நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினத்தையொட்டி, ஒவ்வொரு வருடமும் நினைவு தினமான ஜூலை மாதம் 21ம் தேதி 108 பெண்களுக்கு தாலிக்கு அரை சவரன் தங்கம் வழங்குவதாக நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் அறிவித்திருந்தார்.
இந்த வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம் வழங்குவதாக அறிவித்திருந்ததையொட்டி, ராம்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், அன்னை இல்லம் சார்பில் 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம் வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
இதற்கான விதிமுறைகள், நெறிமுறைகள் விரைவில் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்