Social Activity

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கில் போடப்படும் பெண்..

தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளிக்கு தீர்ப்பு உறுதியாகி உள்ளது

தூக்கிலிடப்படும் முதல் பெண் குற்றவாளிக்கு தீர்ப்பு உறுதியாகி உள்ளது

கான்பூர்: சுதந்திர இந்தியாவின் இதுவரை இப்படி ஒரு சம்பவம் இப்படி நடந்ததில்லை.. வரலாற்றிலேயே முதல்முறையாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார்.. இன்றைய தினம் இந்த செய்திதான் பல ஆச்சரியங்களையும் தாங்கி பரபரத்து காணப்படுகிறது.

என்ன நடந்தது? யார் அந்த பெண்?

அவர் பெயர் ஷப்னம்.. இவர் சலீம் என்பவரை உயிருக்குயிராக காதலித்தார்.. ஒருத்தருக்கொருத்தர் கல்யாணமும் செய்து கொள்ள ஆசைப்பட்டனர்.. ஆனால் வீட்டில் விஷயம் தெரிந்துவிட்டது..

முக்கியமாக ஷப்னம் வீட்டில்தான் எதிர்ப்பு அதிகமாக கிளம்பியது.. கல்யாணத்துக்கு சம்மதிக்கவுமில்லை. ஷப்னம்

ஷப்னம்

இதனால் மனம் உடைந்தும், அதிர்ச்சியும் அடைந்த அந்த காதலர்கள் தங்களுக்கு எதிராக இருந்த மொத்த பேரையும் கொலை செய்ய முடிவு செய்தனர்.. 2008, ஏப்ரல் 15-ம் தேதி அந்த பகீர் காரியத்தையும் அரங்கேற்றினர்.. உபியின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள தன்னுடைய மொத்த குடும்பத்தையும் ஷப்னம் கொன்றுவிட்டார்.. பிறகு, போலீசில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக, தன்னுடைய வீடு, அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டதாகவும் ஒரு கதையை கட்டினார்.. ஆனால், போலீசார் வந்து விசாரணையை கையில் எடுத்ததுமே ஷப்னம் வசமாக சிக்கி கொண்டார். கொலை

கொலை

குடும்பத்தில் உள்ளவர்களை கொல்வதற்கு முன்பு, பாலில் மயக்க மருந்தை கலந்தது சலீம் என்பதும் தெரியவந்தது.. அந்த பாலை குடும்பத்தினரை குடிக்க செய்து கொலை வரை சென்றது, விசாரணையில் வெட்ட வெளிச்சமாகியது. இதில் கொடுமை என்னவென்றால், தன் வீட்டில் இருந்த பிஞ்சு குழந்தையை விட்டு வைக்காமல் சப்னம் கழுத்தை நெரித்தே கொன்றதுதான். கோர்ட்

கோர்ட்

இறுதியில் இந்த வழக்கு கோர்ட்டுக்கு வந்தது.. காதலர்கள் 2 பேருமே குற்றம் புரிந்தவர்கள் என்பது நிரூபணமானது.. வழக்கை விசாரித்த ஒரு அமர்வு நீதிமன்றம் 2 பேருக்கும் மரண தண்டனையும் விதித்தது. ஆனால், 2010-ல், அலகாபாத் கோர்ட்டில் இந்த தீர்ப்பை எதிர்த்து, காதலர்கள் இருவரும் அப்பீல் செய்தனர். ஆனாலலும் மரண தண்டனையை ஹைகோர்ட் உறுதி செய்தது… இதனால், 2 பேரும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றனர்.. 2015-ல் சுப்ரீம் கோர்ட்டும் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது. கருணை மனு

கருணை மனு

அப்போதும் மனம் தளராத 2 பேரும் கடைசி முயற்சியாக, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள்.. குடியரசு தலைவரும் இவர்களது கருணை மனுவை நிராகரித்துவிட்டார்.. எனவே, சுப்ரீம் கோர்ட்டின் முடிவே இறுதியாகிவிட்டது.. இப்போது தூக்கு தண்டனை மறுபடியும் கோர்ட் உறுதி செய்துள்ளது… ஆனால், இன்னும் தேதி உறுதியாகவில்லை.. தூக்கிலிடப்படுவதற்கான தேதி இனிமேல்தான் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. தீர்ப்பு

தீர்ப்பு

அந்த வழக்கின் தீர்ப்பில் இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம் உள்ளது.. இந்தியாவின் ஒரே பெண் மரணதண்டனை அறை இருக்கிறதாம்.. இவ்வளவு காலம் இப்படி ஒரு ரூம் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது… ஏன் என்றால், இதுவரை அப்படி யாருமே இங்கு தூக்கிலிடப்படவில்லை..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top