சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், களப்பணியாளர், செய்தியாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பதவிக்கு ஆன்லைன் மூலம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

CMDA பணியிட விவரங்கள்:
- இளநிலை உதவியாளர் – 34
- சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III – 24
- தட்டச்சர் – 10
- களப்பணியாளர் – 19
- செய்தியாளர் – 44
CMDA கல்வி தகுதி:இளநிலை உதவியாளர்: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III: விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. அத்துடன் தட்டச்சு, சுருக்கெழுத்து ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சு: விண்ணப்பதாரர்கள் தட்டச்சு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
களப்பணியாளர் : விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதுமானது. சைக்களில் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மொத்தம் 44 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியில் சேருவதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள், http://www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் பிப்ரவரி 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.முக்கிய இணைப்புகள்
