டெல்லி : ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நாடு முழுக்க லாக்டவுன் நடைமுறையில் இருப்பதால், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல், பாதியில், ஒத்தி போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதில் ஜூலை 1-ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். ஆனால், தேர்வு கால அட்டவணை அறிவிக்கப்படாத நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை மே 18ம் தேதி திங்கள்கிழமை வெளியிடப்படும். என்று தெரிவித்து இருந்தார்.
ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு
By
Posted on