GOVT JOBS

தமிழகத்தில் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்களில்… எந்த மாவட்டங்கள்..?! கட்டுப்பாடுகள் என்ன?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1083 ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று.

red orange green zone

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 906 ஆக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக சென்னை மக்கள் பெருமளவில் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், திருவல்லிக்கேணியில் இரு தெருக்களில் 3 மற்றும் 7 வயது சிறுவர்கள் உள்பட 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் தட்டாங்குளம் பகுதியில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஒருவர் வாயிலாக 13 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சின்மயா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட ஏழு பேருக்கும், கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கும் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

tamilnadu may 1st

தமிழகத்தில் 12 மாவட்டங்கள்சிவப்பு நிற மண்டலங்களாகவும்..
24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும்..
1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.

சிவப்பு நிற மண்டலங்கள்:

  1. சென்னை
  2. மதுரை
  3. நாமக்கல்
  4. தஞ்சாவூர்
  5. செங்கல்பட்டு
  6. திருவள்ளூர்
  7. திருப்பூர்
  8. ராணிப்பேட்டை
  9. விருதுநகர்
  10. திருவாரூர்
  11. வேலூர்
    12.காஞ்சிபுரம்

ஆரஞ்சு நிற மண்டலங்கள்:

  1. தேனி
  2. தென்காசி
  3. நாகப்பட்டினம்
  4. திண்டுக்கல்
  5. விழுப்புரம்
  6. கோவை
  7. கடலூர்
  8. சேலம்
  9. கரூர்
    10.தூத்துக்குடி
  10. திருச்சிராப்பள்ளி
  11. திருப்பத்தூர்
  12. கன்னியாகுமரி
  13. திருவண்ணாமலை
  14. ராமநாதபுரம்
  15. திருநெல்வேலி
  16. நீலகிரி
  17. சிவகங்கை
  18. பெரம்பலூர்
  19. கள்ளக்குறிச்சி
  20. அரியலூர்
  21. ஈரோடு
  22. புதுக்கோட்டை
  23. தருமபுரி

பச்சை நிற மண்டலங்கள்:

  1. கிருஷ்ணகிரி

விரிவான தகவல்: கட்டுப்பாடுகள் என்னென்ன?

  • இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.
  • சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்.
  • முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.
  • மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.
  • பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.
  • நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி.
  • கிராமப்பகுதிகளில் அனைத்து வகையான சிறு கடைகளையும் திறப்பதற்கு அனுமதி.
  • தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுடன் நகர்புறங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்- மத்திய அரசு.
  • சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும்.
  • ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்- மத்திய அரசு.
  • சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.
  • சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி- மத்திய அரசு.
  • கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.
  • மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.
  • 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்- மத்திய அரசு.
  • பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை.
  • பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துங்களை இயக்க அனுமதி- மத்திய அரசு.
  • பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு; சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது- மத்திய அரசு.

கட்டுப்பாடுகள் என்னென்ன?

  • பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு
  • சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது என அறிவிப்பு
  • டாஸ்மாக் கிடையாது
  • பசுமை மண்டலங்களில், உள்ள மதுபான கடையில் ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் வராமல் இருப்பதை உறுதி செய்தும், 6 அடி இடைவெளியை கடைபிடித்து இருக்கும் படி திறக்க அனுமதி
  • தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே “GREEN ZONE”
  • ஊரடங்கு உத்தரவின் போது பொது இடங்களில் மதுபானம், பான், குட்கா, புகையிலை போன்றவற்றை கண்டிப்பாக அனுமதிக்கப்படாது
  • வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்
  • விமான,ரயில்,மெட்ரோ போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை
  • பச்சை, சிவப்பு, ஆரஞ்சு என அனைத்து மண்டலங்களிலும் 65 வயதுக்கும் அதிகமானவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோர் மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது.
  • தேசிய எல்லையில் அமைத்துள்ள மாநிலங்கள் அண்டை நாடுகளில் இருந்து சாலை மார்க்கமாக வரும் அத்தியாவசிய தேவைகளுக்கான சரக்குகளை சுமந்து வரும் வாகனங்களுக்கு பிரத்யேக அனுமதி தேவை இல்லை.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top