Social Activity

தமிழக அரசின் கலப்பு திருமண உதவித் தொகை மற்றும் அரசு வேலை

தி.மு.க., தேர்தல் அறிக்கையின், 259வது பத்தி: கலப்பு திருமணங்களை ஊக்குவித்து, பிறப்பு அடிப்படையிலான, ஜாதி, இன வேறுபாட்டை அகற்றி, தீண்டாமை ஒழிப்பு நோக்கில், தி.மு.க., ஆட்சி காலத்தில், கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம்’ புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த, அரசாணை வெளியிடப்படும். கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர், ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில், அவர் பிற இனத்தவரை மணந்து கொண்டால் வழங்கப்படும் நிதியுதவி, 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் மற்றும் தாலிக்கு, 8 கிராம் தங்ககாசு வழங்கப்படும்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்: ஜாதி மறுப்பு திருமணம், -கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படும். 

தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் 5% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என முதல்வருக்கு கி.வீரமணி கோரிக்கை.

தமிழ்நாட்டில்‌ வேலைவாய்ப்பு அலுவலகங்கள்‌ மூலம்‌ அரசுப்‌ பணிக்கு நியமனம்‌ செய்யும்போது முன்னுரிமை தரப்படவேண்டியவர்களின்‌ பட்டியலில்‌ கலப்புத்‌ திருமணம்‌ செய்துகொண்டவர்களையும்‌ சேர்த்துத்‌ தமிழக அரசு 1986 ஆம்‌ ஆண்டே ஆணையிட்டுள்ளது. 2006 முதல்‌ – 2011 ஆம்‌ ஆண்டுவரை அன்றைய திமுக ஆட்சியின்போது தமிழக அரசின்‌ இடைநிலை ஆசிரியர்‌ பணி நியமனங்களில்‌ கலப்புத்‌ திருமணம்‌ செய்துகொண்டோர்‌ 287 பேர்‌ பணி நியமனம்‌ பெற்றுள்ளனர்‌.கடந்த 5 ஆண்டுகளாகக்‌ கலப்புத்‌ திருமணம்‌ செய்துகொண்ட எவரும்‌ ஆசிரியர்‌ பணி நியமனம்‌ செய்யப்படவில்லை. மறைந்த முதலமைச்சர்‌ திரு எம்‌.ஜி.ஆர்‌ அவர்களால்‌ அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத்‌ திட்டத்தைக்‌ கடந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை. சமூகநீதியில்‌ அக்கறைகொண்ட தங்களது தலைமையிலான அரசு இந்தத்‌ திட்டத்தை மீண்டும்‌ செயல்படுத்திட உரிய ஆணையை வழங்க வேண்டும் என்று ஏற்கனவே முதல்வருக்கு கோரிக்கை விடுத்து விடுதலை சிறுத்தைகளின் கட்சி எம்பி ரவிக்குமார் கடிதம் எழுதி இருந்தார்.161601இந்நிலையில் அதை நிறைவேற்ற வலியுறுத்தி கி வீரமணி அவர்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார் அதில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் சாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது.. மேலும் தி.மு.க. அரசில் ஊக்கத்தொகை அளிப்பு தொடரட்டும், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் இன்டர்காஸ்ட் கோட்டா 5% இட ஒதுக்கீடு அளித்து நாட்டையே சமத்துவபுரமாக ஆக்க வேண்டும். மேலும் தி.மு.க. ஆட்சியின்மூலமே, அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்காலத்திலேயே இந்தப் புதிய சாதனை வரலாறு நிகழ்த்தப்படவேண்டும் என்று கூறியுள்ளார்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம்தமிழ்நாடு அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் இருவகையாகப் பிரித்து அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது.

இத்திட்டம் முன்பு அஞ்சுகம் அம்மையார் கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் என்கிற பெயரில் செயல்படுத்தப்பட்டது.

கலப்புத் திருமணம் முதல்வகைதமிழ்நாடு அரசால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் கட்டாயம் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும். வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.

திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.உதவித்தொகைரூபாய் 20000 வழங்கப்படும்.

இதில் ரூபாய் 10000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 10000 காசோலையாகவும் வழங்கப்படும்.கலப்புத் திருமணம் இரண்டாம்வகைதமிழ்நாடு அரசால் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளும் முற்பட்ட வகுப்பினர்களுக்கு நிதியுதவி அளிக்கும் வகையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் பிற்படுத்தப்பட்ட அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும், மற்றொருவர் முற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.

பெண்ணின் வயது 20 முடிந்திருக்க வேண்டும்.வருமான உச்சவரம்பு எதுவுமில்லை.திருமணம் நடந்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உதவித்தொகைரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 காசோலையாகவும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப்படிவங்களைப் பெற்று நிரப்பி தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top
https://1xbet-az-casino2.com, https://mostbet-azerbaijan.xyz, https://mostbetcasinoz.com, https://mostbet-az24.com, https://mostbetsportuz.com, https://1xbetaz888.com, https://mostbetaz2.com, https://1winaz777.com, https://pinup-azerbaijan2.com, https://pinup-bet-aze1.com, https://vulkan-vegas-kasino.com, https://1xbet-az-casino.com, https://mostbet-uz-24.com, https://mostbet-oynash24.com, https://vulkan-vegas-spielen.com, https://pinup-az24.com, https://1xbetaz777.com, https://mostbet-qeydiyyat24.com, https://mostbettopz.com, https://mostbet-uzbekistons.com, https://1xbetcasinoz.com, https://mostbet-azerbaycanda24.com, https://mostbetaz777.com, https://vulkan-vegas-bonus.com, https://1xbet-azerbaycanda24.com, https://1win-az-777.com, https://vulkanvegas-bonus.com, https://1xbet-az24.com, https://1xbet-azerbaycanda.com, https://1xbetkz2.com, https://mostbetuztop.com, https://vulkan-vegas-888.com, https://1win-azerbaijan2.com, https://vulkanvegaskasino.com, https://1xbetaz3.com, https://pinup-azerbaycanda24.com, https://mostbetuzonline.com, https://vulkan-vegas-erfahrung.com, https://mostbet-az.xyz, https://1win-azerbaycanda24.com, https://1x-bet-top.com, https://1win-az24.com, https://mostbet-azerbaycan-24.com, https://mostbetsitez.com, https://mostbet-azerbaijan2.com, https://most-bet-top.com, https://1winaz888.com, https://pinup-qeydiyyat24.com, https://vulkanvegasde2.com, https://kingdom-con.com, https://1xbetsitez.com, https://pinup-bet-aze.com, https://mostbet-kirish777.com, https://1win-azerbaijan24.com, https://mostbetuzbekiston.com, https://1win-qeydiyyat24.com, https://vulkan-vegas-casino2.com, https://mostbet-azer.xyz, https://mostbet-royxatga-olish24.com, https://1xbetaz2.com, https://1xbet-azerbaijan2.com, https://mostbet-ozbekistonda.com, https://mostbet-azerbaycanda.com, https://vulkan-vegas-24.com, https://mostbet-az-24.com