அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றில் மதுக்கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7-ந்தேதி முதல் திறக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வெளியே உள்ள டாஸ்மாக் நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகளில் ஒரே நேரத்த்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. மதுக்கடைகளில் தனிநபர் இடைவெளி 6 அடி தூரமாக இருக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். டாஸ்மாக்கில் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறக்க மட்டுமே அனுமதி, பார்களை திறக்க அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.