Social Activity

தமிழக அரசு சில முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளனர்

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்திரவு இரண்டாவது முறையாக மே 3-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு பொறுத்தமட்டிலும் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஊடகங்கள் வந்துட்டு ஒருசில தளர்வுகள் இருக்கும் எனவும் ஒரு சில விளக்கங்களை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அந்த ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் உத்தரவிடப்பட்டு இருந்தது அதன் பிறகு வந்த தமிழக அரசு தமிழகத்தை பொறுத்த மட்டிலும் எந்தவித தளர்வுகள் இருக்காது அப்படி என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று வந்து ஒரு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணை மே 3ஆம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணிகள் தொடரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது 100 நாள் வேலை பணிகளை பொறுத்தமட்டிலும் மூன்றில் ஒரு பகுதியினர் தனிமனித இடைவெளியுடன் சமூக இடைவெளி விட்டு பணியாற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஊரகப் பகுதிகளை ஏரிகள் தூர் வாருதல் நீர் பாசனம் ஆணைகள் மற்றும் சாலைகள் செங்கல் சூளைகள் கட்டுமானப்பணிகள் சமூக இடைவெளி தான் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆலைகள் பொறுத்தமட்டிலும் சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள் கரும்பு, கண்ணாடி, மிகப் பெரிய காகித ஆலைகள் ஆகியவற்றை தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது மேலும் குடிநீர் வினியோகம் தூய்மை பணிகள் மின்சார பணிகள் செய்வதற்கு அனுமதி கொடுக்கப் பட்டிருக்கிறது.

வைரஸ் பாதித்த பகுதிகளில் இந்த அரசாணை பொருந்தாது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எதிரொலி: ஆன்லைனில் மீன் விற்பனைக்கு மீன்வளர்ச்சி கழகம் ஏற்பாடு.
சென்னை: கொரோனா எதிரொலியாக ஆன்லைனில் மீன் விற்பனைக்கு மீன்வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. meengal என்ற செயலி அறிமுகம்; காலை 9.30 முதல் பகல் 12.30 மணிவரை மீன்களை பெறலாம். செயலியை பயன்படுத்தி மீன்களை பெற்றுக் கொள்ளலாம் என அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனாக்கான சிகிச்சை அல்ல; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுர குடிநீரைப் பருகலாம்.தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 34 மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் 34 மாவட்டங்களில் 1,387 குடிமராமத்து திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு. சென்னை மண்டலத்தில் 377 பணிகளுக்கு ரூ.155 கோடியும், திருச்சி மண்டலத்தில் 458 பணிகளை மேற்கொள்ள ரூ.140 கோடியும், மதுரை மண்டலத்தில் 306 பணிகளுக்கு ரூ.156 கோடியும், கோவை மண்டலத்தில் 246 பணிகளை மேற்கொள்ள ரூ.45 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top