தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கரோனா எதிரொலியாக ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடு செய்ய செலவினக் குறைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதில் ஒருபகுதியாக தமிழக அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. செலவினக் குறைப்புக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஏற்கெனவே உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம் எனவும் அரசுப் பணியாளர்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்டவற்றில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.