GOVT JOBS

தமிழக அரசு மீண்டும் ரூ. 1000 வழங்கப்படும்.

தமிழக அரசு கரோனா வைரஸ் காரணமாக பல சலுகை திட்டங்களை அறிவித்து வந்து இருக்காங்க அதுல அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்க அது யாரால் வழங்கினார்கள் கிடைக்கின்றது பாக்க போறோம்.

தமிழக அரசு 3780 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டுள்ளது.

அனைத்து குடும்ப அட்டை அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி பருப்பு சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலை இன்றி வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறிய பின் ஏப்ரல் மாதம் கூடுதலாக பெற்றுக்கொள்ளலாம் சொல்லியிருக்காங்க.

கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுனர் நலவாரியம் உள்ள ஆட்டோ தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பு ஆயிரம் ரூபாய் மற்றும் ஒரு கிலோ சமையல் என்னையும் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் சிக்கி தவிக்க பிற மாநிலத்தை சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு அவர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.

பதிவுசெய்யப்பட்ட நடைபாதை வியாபாரி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆயிரம் ரூபாயுடன் கூடுதலாக 1000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் 2020 ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று அரசு அளித்துள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் நிவாரணத் தொகையாக ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருக்கிறார்கள்.

அமைப்பு சாரா தொழிலாளர் நல வரியம் என்ன பார்த்தால்

சலவைத் தொழிலாளர் நலவாரியம்

முடி திருத்துவோர் தொழிலாளர் நல வாரியம்

பனைமரத் தொழிலாளர் நல வாரியம்

கைவினைத் தொழிலாளர் நல வாரியம்

கைத்தறி பட்டு நெய்யும் தொழிலாளர் நல வாரியம்

தோல் பதனிடும் தொழிலாளர் நல வாரியம்

மண்பாண்ட தொழிலாளர் நல வாரியம்

வீட்டுப் பணியாளர் தொழிலாளர் நல வாரியம்

நெசவாளர் தொழிலாளர் நலவாரியம்

சமையல் தொழிலாளர் நல வாரியம்

கிராமிய கலைஞர் நலவாரியம்

இந்த தொழிலாளர் நல வாரிய களுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரண தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் நேற்று அறிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top