Social Activity

தமிழக அரசு ரேஷன் கார்டு மற்றும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய தகவல்

தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு காமராஜ் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது கூட்டத்தின் நிறைவில் அதன் குறித்த தகவல்களை அமைச்சர் காமராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது கருத்தில் கொண்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முழுக்க உதவித் தொகையாக தலா ரூபாய் 1000 வீதம் வழங்க தமிழக முதலமைச்சர் அவர்கள் வருத்தப்பட்டு இதற்காக 2014 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது இதில் 98.7 7 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டது.

ஏப்ரல் முதல் ஜூன் மற்றும் முன்னுரிமை அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் விலையில்லாமல் அரசி வழங்குவதற்கு மத்திய அரசு ஆணை இடப்பட்டது எனினும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னுரிமை அல்லாத NPPS குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதற்கான முதலமைச்சராக உத்தரவிடப்பட்டு 438 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்று நபர்களுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது அவர்கள் பெற்று வரும் அரிசி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 655.3 கோடி ரூபாய் செலவில் வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் மேற்கண்டவாறு ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித்தொகை ரூ 1000 வீதம் வழங்குவதற்கும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா கூடுதல் அரிசி சர்க்கரை பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்குவதற்கும் வழங்கப்படும் மானியத்தை காட்டிலும் கூடுதலாக 3,108.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலையில்லா பொருட்கள் ஏப்ரல் மாதத்தில் 96.30% குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்தில் 4ம் தேதி வரையில் 23.3 7% குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது மேலும் கடந்த அக்டோபர் 2019 முதல் 2020 முடிய உள்ள காலத்தில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தோர் ஆனால் இதுவரை குடும்ப அட்டை அச்சிட்டு வழங்க பெறாமல் உள்ள 71067 குடும்பங்களுக்கும் இந்த மாதம் முதல் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் குறுஞ்செய்தி மூலம் தகவல்கள் பெறப்பட்டு குடும்ப அட்டை குறியீட்டு எண் ஆதார் எண் அல்லது கைபேசி எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள ஆணை இட்டல் அதன் மூலம் தங்களுக்கு உரிய அத்தியாவசிய பொருட்களை பெற்று வருகிறார்கள்.

கொரோனா நோய்த்தொற்றை கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் 845 கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 2 லட்சத்து 92 ஆயிரத்து 912 குடும்ப அட்டைதாரர்கள் இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 120 குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நியாய விலை கடை பணியாளர்களைக் கொண்டு நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான பொருள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது தொடங்கப்பட்ட 23 -03-2020 முதல் 1-5 -2020 வரை அது கடந்த 49 நாட்களில் மட்டும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 4 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதனையும் சேர்த்து இந்த ஆண்டில் இதுவரையில் 22.5 1 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது இந்த கொள்முதல் மேலும் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த அளவானது நெல் கொள்முதல் வரலாற்றில் கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட அதிகபட்ச நெல் அளவை விட இருபது சதவீதம் கூடுதலாகும் மேலும் இந்த ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 76 ஆயிரத்து 606 விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்துள்ளனர் விற்பனை செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை 4,257 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் மூலம் வழங்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவு பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top