பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தியாக, குடும்ப அட்டை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடையே பேசுகையில், ”தமிழக அரசு கடந்த மூன்று மாதங்களாக விலையில்லாமல் ரேஷனில் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதோடு பல்வேறு நலவாரியத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 வரையில் உதவித் தொகை வழங்கியுள்ளது. தமிழக முதல்வரின் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை கடன் பெறலாம். ரேஷன் கார்டு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினார்.








