Social Activity

தமிழக அரசு வேண்டுகோள் முழு ஊரடங்கும் எதெல்லாம் செயல்படும்!!எதெல்லாம் செயல்படாது!!

கொரனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் மேலும் தமிழக அரசு கடுமையாக அதன்படி சென்னை கோவை மதுரை ஆகிய மாவட்ட மாநகராட்சிகளில் நான்கு நாட்களும் சேலம் திருப்பூர் ஆகிய மாவட்ட மாநகராட்சிகளில் மூன்று நாட்களும் முழு ஊரடங்கு அமல் படுத்தப் படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் புதிதாக மூன்று மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது காஞ்சிபுரம், திருவள்ளுவர், விழுப்புரம், மற்றும் செங்கல்பட்டு சார்ந்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளன.

மேற்சொன்ன பகுதிகளில் 26 4 2020 ஞாயிறு காலை 6 மணி முதல் 29 4 2020 முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல் படுத்தப்படும் இந்த ஊரடங்கு கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

1. மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை கூடங்கள் மருந்தகங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரவதி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள்

2. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை காவல் துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மின்சாரத் துறை ஆவின் உள்ளாட்சிகள் குடிநீர் வழங்கல் துறை ஆகிய துறைகளின் தேவையான பணியாளருடன் மட்டும் செயல்படும்.

3. மத்திய அரசு அலுவலகங்களிலும் வங்கிகளிலும் அத்தியாவசிய பணிகளுக்கு தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் .

4. அம்மா உணவகங்கள் தானியங்கி ATM பணம் வழங்கும் இயந்திரங்கள் ஏடிஎம் வழக்கம் போல் செயல்படும் பொதுவினியோக கடைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் மற்றும் அவற்றின் சரக்கு போக்குவரத்து வழக்கம் போல் செயல்படும்.

5. பெட்ரோல் டீசல் பங்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் பால் வினியோகம் சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் வழக்கம்போல் நடைபெறலாம்.

6. உணவகங்களில் தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

7. பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் வழக்கம்போல் செயல்படலாம் .

8. முதியோர் மாற்றுத் திறனாளி ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோருக்கு உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.

9. ஆதரவற்றோருக்கு மாவட்ட நிர்வாகங்கள் சமூக நலத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் நடத்தப்படும் சமையல் கூடங்கள் தொடர்ந்து செயல்படும்.

10. ஏழைகளுக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலரின் உரிய அனுமதியுடன் இயங்கலாம்.

11. மொத்த காய்கறி சந்தையில் உரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் அதேபோல் காய்கறி பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் அனுமதிக்கப்படும்.
மேற்கண்ட நாட்களில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட பிற கடைகள் எவற்றுக்கும் அனுமதி இல்லை.

12. மேற்கண்ட பணிகளை தவிர பிற பணிகளுக்கு முழுமையான தடை விதிக்கப்படுகிறது.

13. இதர அரசு அலுவலர்கள் பத்திரப்பதிவு அலுவலகம் உட்பட செயல்படாது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் தனியார் நிறுவனங்கள் செயல்படாது.

மேற் குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர மாவட்டத்தின் பிற இடங்களில் பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனுமதிகள் தொடரும் இக்காலகட்டத்தில் நோய் தடுப்பு பகுதிகளில் மட்டும் கடுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் இப்பகுதிகளில் தினந்தோறும் இருமுறை கிருமி நாசினி தெளிக்கப்படும் இந்த தடையை மீறினால் அவர்கள் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் தடையை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

என வைரஸ் நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும் தீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் என்பதால் இதை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்திருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top