GOVT JOBS

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் வேலை

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையின் கீழ் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதனடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

Application form

பதவியின் பெயர்:

கிராம உதவியாளர்

காலிப்பணியிடங்கள்:

திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலகில் அமைந்துள்ள 9 தாலுகாக்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 145 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தாலுகா வாரியான காலியிடங்கள் :

திருவள்ளூர் – 20

ஊத்துக்கோட்டை – 28

ஆவடி – 6

பூவிருந்தவல்லி – 17

திருத்தணி – 14

பள்ளிப்பட்டு – 1

இ.ரா.கி.பேட்டை – 5

பொன்னேரி – 27

கும்மிடிப்பூண்டி – 27

வயது வரம்பு:

வயது 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 21 ஆண்டுகள்.

அதிகபட்சமாக பொதுப்பிரிவினருக்கு 30 ஆண்டுகள்,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினருக்கு 32 ஆண்டுகள்,

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 35 ஆண்டுகள்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்ட தகுதிகளுடைய நபர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் சார்ந்த வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17.02.2021


IMPORTANT LINKS

DOWNLOAD NOTIFICATION

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top