Social Activity

தமிழ்நாடு மின்சார வாரியம் ஜூன் 6ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம்

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள காலத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 6-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கரோனா தொற்று பரவுதலால் மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு, முதல் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாழ்வழுத்த மின்நுகா்வோா்களின் இடா்ப்பாடுகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளா்களின் மின்னிணைப்புகளுக்கு, மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள் மாா்ச் 25 முதல் ஏப்.14-ஆம் தேதி வரை இருக்குமாயின், அதற்கான தாமதக் கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு அல்லது மறு இணைப்புக் கட்டணமின்றி ஏப்.14-ஆம் தேதி வரை கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசு ஏப்ரல் 30-ஆம் தேதி வரை, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பு செய்ததற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து ஊரடங்கு முடிந்து ஏப்.30-ஆம் தேதிக்கு பிறகு, மின்கட்டணம் செலுத்த வரும் தாழ்வழுத்த மின்நுகா்வோா்களின் இடா்பாடுகளை கருத்தில் கொண்டு, தாழ்வழுத்த மின்நுகா்வோா்களின் மின்கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான இறுதி நாள், மாா்ச் 25 முதல் ஏப்30-ஆம் தேதி வரை இருக்குமாயின், அத்தொகையினை செலுத்த மே 6-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. மாா்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் (மாா்ச் 25 முதல் ஏப்.30 வரை) மின்கட்டணம் செலுத்த வேண்டிய தாழ்வழுத்த மின்நுகா்வோா்கள், அதற்கு முந்தைய மாத கணக்கீட்டு பட்டியல்படி மின்கட்டணம் செலுத்தலாம். இவ்வாறு செலுத்திய மின்கட்டணம் பின்வரும் மாத கணக்கீட்டு மின்கட்டணத்தில் சரிகட்டல் செய்யப்படும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top