Social Activity

பட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி பிராண்டு ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் மற்றும் கலர் ஒ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பேக் மற்றும் க்ரிஸ்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார் மற்றும் 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

ரியல்மி 5எஸ் சிறப்பம்சங்கள்:

  • 6.51 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  • ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
  • அட்ரினோ 610 GPU
  • 4 ஜி.பி. ரேம்
  • 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
  • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
  • டூயல் சிம் ஸ்லாட்
  • கலர் ஒ.எஸ். 6.0 மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 பை
  • 48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, EIS
  • 8 எம்.பி. 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 1.12μm பிக்சல், f/2.25
  • 2 எம்.பி. டெப்த் சென்சார்
  • 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ், 1.75μm பிக்சல், f/2.4
  • 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0
  • கைரேகை சென்சார்
  • 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
  • ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • மைக்ரோ யு.எஸ்.பி.
  • 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
  • 10 வாட் சார்ஜிங்

ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் புளூ. க்ரிஸ்டல் பர்ப்பிள் மற்றும் க்ரிஸ்டல் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செ்யயப்பட்டுள்ளது. இதன் விற்பனை நவம்பர் 29 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top