Social Activity

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் (K A Sengottaiyan) தனது ட்விட்டர் பக்கத்தில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து விளக்கத்தையும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் (K A Sengottaiyan) பகிர்ந்து வருகிறார். முன்னதாக, 13 ஆம் தேதி “தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப்பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் (Students) சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யபட்டிருக்கிறது. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் எனப் பகிர்ந்திருந்தார்.

இருப்பினும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு உள்ளதால், மாணவ-மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. 

இந்தநிலையில், ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் (K A Sengottaiyan) செய்தியாளர்களிடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) குறித்து பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது, 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) சில மாணவ-மாணவிகள் அருகில் உள்ள வேறு மாவட்டத்திற்கு சென்று எழுத உள்ளனர். அவர்களுக்கு மாற்று வழிகளை செய்து கொடுப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். இதுதொடர்பான தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் மேலும் 12 ஆயிரம் பள்ளிகள் உள்ளன அனைத்து பள்ளிகளிலும் தேர்வு நடக்கும் மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் தேர்வின் பொழுது வரவேண்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top