Social Activity

பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா பற்றித் தெரியுமா உங்களுக்கு..?

இந்திய வேலைவாய்ப்பு சந்தையின் முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்று திறனற்ற பணியாளர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. தேர்ந்தெடுத்த துறைகளில் பிரத்யேக திறன் வாய்ந்தவர்களாகத் தொழிலாளர்களை உருவாக்க உதவும் தொழிற்பயிற்சிக் கூடங்கள் போதுமான அளவு இல்லாத காரணத்தினால் அதிக அளவு மக்கள் தொகை இருந்தும் கூடத் தொழில் நிறுவனங்கள் தமக்குப் பொருத்தமான தொழிலாளர்களைத் தேர்வு செய்து கொள்வதென்பது சிரமமாகவே உள்ளது.

இப்பிரச்சினையை உணர்ந்த மோடி அரசு, 2016 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், சுமார் 1கோடி இந்திய இளைஞர்கள் பயனடையும் வகையில் பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (பிஎம்கேவிஒய்) என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

இத்திட்டம் 2015 ஆம் ஆண்டின் போது நேஷனல் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் (என்எஸ்டிஸி) அமைப்பினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின் குறிக்கோள் என்ன?

இந்திய இளைஞர்களுக்குத் தொழில்முறை சார்ந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்து அதன் மூலம் அவர்தாம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் குறிக்கோள் ஆகும். இப்பயிற்சிக்கு ஆகும் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக் கொள்கிறது. இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது என்பது கூடுதல் சிறப்பு.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

குறைந்த காலப் பயிற்சி

முன்னர்ப் பெறப்பட்ட திறனை அங்கீகரித்தல்

பிரத்யேகமான செயல்முறை திட்டங்கள்

கௌஷல் மற்றும் ரோஸ்கர் மேளா

வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுதல்

தொடர்ச்சியான கண்காணிப்பு

குறைந்த காலப் பயிற்சி

பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்ட அல்லது வேலை கிடைக்காத இந்தியப் பிரஜைகளுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியானது பிஎம்கேவிஒய் பயிற்சி மையங்களில் நேஷனல் ஸ்கில்ஸ் குவாலிஃபிகேஷன் ஃப்ரேம்வொர்க்கைப் (என்எஸ்க்யூஎஃப்) பின்பற்றி வழங்கப்படுகிறது.

மென்பொருள் திறன்கள், சுயதொழில் முனைவு, ஃபைனான்ஷியல் மற்றும் டிஜிட்டல் அறிவு போன்ற களங்களை உள்ளடக்கியது இப்பயிற்சி. பயிற்சிக்கான காலம், பணியின் தன்மையைப் பொறுத்து சுமார் 150 முதல் 300 மணி நேரம் வரை மாறுபடக்கூடும்.Advertisement

Advertisement

தேர்வுகளில் வெற்றி பெறுவோர், இத்திட்டத்தின் ட்ரெயினிங் பார்ட்னர்கள் (டிபிக்கள்) மூலம் தகுந்த பணிகளில் பணியமர்த்தப்படுவர்

முன்னர்ப் பெறப்பட்ட திறன்களை அங்கீகரித்தல்

பயிற்சி பெற வந்தவர்களுள் எவருக்கேனும் முந்தைய அனுபவம் அல்லது திறன்கள் இருப்பின், இத்திட்டத்தின் கீழ் அவர்களின் திறன்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. ரெகக்னிஷன் ஆஃ ப்ரயர் லெர்னிங் (ஆர்பிஎல்) என்ற அமைப்பின் நோக்கம், ஒழுங்குமுறையற்ற தொழிலாளர்களின் ஆற்றலை என்எஸ்க்யூஎஃப் ஸ்டாண்டர்ட்ஸ் விதிகளின் படி ஒழுங்குபடுத்துவதே ஆகும்.

எம்எஸ்டிஇ/என்எஸ்டிஸி -இனால் அமர்த்தப்பட்ட ஏஜென்ஸிக்கள் ஆர்பிஎல் ப்ராஜெக்ட்க்ளை (ஆர்பிஎல் கேம்ப்கள், எம்ப்ளாயரின் வளாகத்தில் ஆர்பிஎல் மற்றும் ஆர்பிஎல் மையங்கள்) செயல்படுத்திப் பயிற்சி மாணவர்களிடையே கள அறிவை விதைக்கத் தலைப்படுகின்றன.

பிரத்யேகமான செயல்முறை திட்டங்கள்

பிரத்யேகமான ஏரியாக்கள் அல்லது அரசு அமைப்புகள் அல்லது கார்ப்பரேட்களின் வளாகங்கள் போன்றவற்றிலும், தற்போது நடைமுறையில் உள்ள குவாலிஃபிகேஷன் பேக்குகள் (க்யூபி -க்கள்)/நேஷனல் ஆக்யுபேஷனல் ஸ்டாண்டர்டுகள் (என்ஓஎஸ் -கள்) ஆகியவற்றில் குறிப்பிடப்படாத பொறுப்புகளிலும் பிரத்யேக பயிற்சி கிடைக்க வழிவகைச் செய்கின்றன இத்திட்டங்கள்.

இத்திட்டங்களுக்கான தேவைகள் குறைந்த-காலப் பயிற்சி மற்றும் பங்குதாரருக்கு உகந்த திட்டங்களுக்கான தேவைகளிலிருந்து வேறுபட்டிருப்பதனால் இவை பிரத்யேகமானவையாகக் கருதப்படுகின்றன.

மாநில அல்லது மத்திய அரசு நிறுவனம் அல்லது அதற்கு இணையான கார்ப்பரேட் அமைப்பு ஏதேனும் ஒன்று பங்குதாரராக இருக்கலாம்.

கௌஷல் மற்றும் ரோஸ்கர் மேளாக்கள்

ட்ரெயினிங் பார்ட்னர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கௌஷல் மற்றும் ரோஸ்கர் மேளாக்களை (ஜாப்-ஃபேர்கள்) நடத்துவர். அதோடு, அவர்கள் நேஷனல் கெரியர் சர்வீஸ் மேளாக்கள் மற்றும் களப்பணிகளில் முழுமூச்சாக ஈடுபடுவதும் அவசியம்.

வேலைவாய்ப்புக்கு வழிகாட்டுதல்

தேர்வில் வெற்றி பெறுவோர், ட்ரெயிங் பார்ட்னர்களால் பணியிலமர்த்தப்படுவர். மேலும் சுய-தொழில் தொடங்க முற்படுவோருக்கு அவர்கள் தொழில்முனைவு வழிகாட்டுதலும் வழங்குவர்.

தொடர்ச்சியான கண்காணிப்பு

இத்திட்டத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, முன்னறிவிப்பற்ற வருகைகள், தொலைப்பேசி அழைப்புகளை மதிப்பீடு செய்தல், சுய-ஆய்வு அறிக்கைகள் போன்ற பல்வேறு கண்காணிப்புச் செயல்திட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது.

இத்திட்டத்துக்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?

இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று உங்களுக்கு ஆர்வம் இருக்கக்கூடிய துறை அல்லது பிரிவைத் தேர்வு செய்து அதில் பதிவு செய்து கொள்ளலாம்.

Website Link Click Here

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top