Social Activity

பெரம்பலூர் அருகே டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு

பெரம்பலூர் பகுதியில் குடிமராமத்து பணிகளுக்காக தோண்டிய போது அரிய வகை டைனோசர் முட்டைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பகுதியில் ஏற்கனவே பல படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

குடிமராமத்து பணிகள்:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு பள்ளிக்கு அருகே உள்ள ஏரியில் குடிமராமத்து பணிகளுக்காக அங்கிருந்தவர்கள் மண் எடுக்க குழி தோண்டியுள்ளனர். தோண்டி எடுத்து பார்க்கும் போது பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய டைனோசரின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடல் வாழ் மீன் வகை உயிரினங்களின் படிமங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நத்தை, ஆமை மற்றும் நட்சத்திர வகை மீன்களின் படிமங்கள் என்று கூறப்படுகிறது. பல்வேறு அளவுகளில் டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த பகுதிகளில் இதுபோல் பல படிமங்களை சாத்தூரில் உள்ள புவியியல் ஆய்வாளர் எம்.எஸ்.கிருஷ்ணன் கண்டுபிடித்துள்ளார்.

அவர் படிமங்களுடன் ஒரு கல்மரத்தையும் கண்டுபிடித்துள்ளார். அந்த கல்மரம் பல ஆயிரம் வருடங்களுக்கு முந்தையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் பல கல்மர துண்டுகள் அந்த அப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.

தொல்லியல் மண்டலமாக மாற்ற வேண்டும்:

இந்த கல்மர துண்டுகள் கிரிட்டேஸியஸ் காலத்து மர வகை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கல்மரங்கள் தமிழகத்தில் ஆலந்தூர் பகுதிகளில் மட்டும் தான் தற்போது வரை கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்மரங்கள், டைனோசர் முட்டைகள் மற்றும் படிமங்களை வைத்து பார்க்கையில் இந்த பகுதி கடல் பகுதியாக ஒருகாலத்தில் இருந்துள்ளது என்றும் தெரிகிறது.

இப்படியான இந்த அரிய பகுதியினை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க என்றும் தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக இந்த பகுதியினை அறிவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top