Uncategorized

பெரும் நகரங்களில் வாடகைக்கு மலிவான வீடுகள் கிடைக்குமா?

Rental Housing Complexes Scheme: பெரும் நகரங்களில் வாடகைக்கு மலிவான வீடுகள் கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் இருப்பவர்களின் கனவு விரைவில் நனவாகும். வீட்டுவசதி திட்டத்தின் கீழ், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு குறைந்த வாடகைக்கு வீடுகள் (Rented House) கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு போர்டல் தொடங்கப்பட்டுள்ளது.

மலிவான வீடுகளை கட்டியெழுப்பும் நிறுவனகளுக்கு பல சலுகைகளும், மானியங்களும் வழங்கப்படும். இத்திட்டத்தால் 3.5 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.

நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மலிவு விலை வாடகை வீடு (Rental housing complexes scheme) திட்டத்திற்காக arhc.mohua.gov.in என்ற போர்ட்டலைத் தொடங்கி வைத்தார்.

மலிவான வாடகை வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அரசாங்கம் பல வசதிகள் மற்றும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மலிவான விலையில் வீடுகள் கிடைக்கும். நகர்ப்புறத்தை நோக்கி வரும் புலம்பெயர்ந்தோர் மற்றும் ஏழைகளுக்கான வாடகை வீட்டு வளாகத்திற்கும் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி விலக்கு கிடைக்கும். இந்த திட்டம் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா-நகர (PMAY-U) கீழ் வரும்.

இந்தத் திட்டம் பொது-தனியார் கூட்டு (PPP) மூலம் செயல்படுத்தப்படும். மேலும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள வீடுகளும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும். கட்டுமான நிறுவனங்கள் தங்கள் காலியான நிலத்தில் அடுக்கமாடி கட்டிடங்கள் கட்டும் மற்றும் அதன் பராமரிப்பையும் நிறுவனமே பார்த்துக்கொள்ளும். எப்படி என்றால், அரசு அவர்களுக்கு மானியம் வழங்கும்.

இந்த திட்டத்தின் கீழ், நகர்ப்புற கட்டுமான அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்து இந்த வீடுகளை காட்டிய பின்னர், அது வாடகைக்கு விடப்படும்.

இந்த திட்டத்தில் சேர மூன்று நிறுவனங்கள் ஏற்கனவே முயற்சி எடுத்துள்ளன. இந்த நிறுவனங்கள் ஜெய்ப்பூர், பரோடா, பகதூர்கர் மற்றும் பெங்களூரில் 2800 வீடுகளை கட்டும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top