Social Activity

மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி

சென்னை: மக்கள் பெரிதும் எதிர்பார்த்த மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கு பேருந்து போக்குவரத்து மற்றும் ரயில் போக்குரத்துக்கு அனுமதி என இன்று ஒரே நாளில் இரண்டு சூப்பர் அறிவிப்புகளை வெளியிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடம் பெரும் பாராட்டை பெற்றுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை போக்குவரத்து

அந்த வகையில் தற்போது, தமிழ்நாட்டில், மாவட்டத்திற்குள்ளான பொது பேருந்து போக்குவரத்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் தரிசனம், வணிக வளாகங்கள், தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், உள்ளிட்டவைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதேபோல் ஐந்து மாதங்களுக்கு பிறகு சென்னையில் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.பேருந்துகள் இங்கு ஓடிக்கொண்டிருக்கின்றன.

பேருந்து போக்குவரத்து

இதுபற்றி தமிழக முதல்வரின் கவனத்திற்கு ஊடகங்களும் மற்றும் பொதுமக்களும் எடுத்து சென்றனர். மக்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நிலையான வழிகாட்டுநடைமுறைகளை பின்பற்றி 7.9.2020 முதல்தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களுக்கிடையேயும் அரசு மற்றும் தனியார் பொது பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான இரயில் போக்குவரத்திற்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி , வரும் 7.9.2020 முதல் மாநிலத்திற்குள் பயணியர் இரயில்போக்குவரத்து செயல்பட அனுமதி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நேற்று ஒரே நாளில் மக்கள் வைத்த கோரிக்கை ஏற்று அடுத்த நாளே மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பொதுமக்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே இ பாஸ் தளர்வு, கடைகளை 8 மணி வரை திறக்க அனுமதி உள்ளிட்ட நிறைய தளர்வுகளை அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி மக்களுக்கு தடையாக இருந்த கடைசி இரண்டு தடைகளாக மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி அளித்துள்ளது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

எங்கும் செல்லாம்

ஆக்கப்பூர்வ விமர்சனம்

எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும் அதற்கு பதிலடியாக எதிர்விமர்சனம் செய்வதற்கு பதில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்று அதற்கு செவி சாய்த்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருவது அரசியல் நிபுணர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

எல்லாம் திறந்தாச்சு

பொதுமக்களே இனி தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு எல்லாவற்றையும் திறந்துவிட்டுவிட்டது, எனவே வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது, வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிப்பது உள்ளிட்ட அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால் மட்டுமே இந்த நோய்த் தொற்று வராமல் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். இதைத்தான் அரசும் எதிர்பார்க்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top