GOVT JOBS

மத்திய அரசு வழங்கும் ரூ.6000 நிதியுதவி – உங்கள் தகுதியை சரிபார்ப்பது எப்படி?

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உங்களால் ரூ.6000 வரை பணம் பெற முடியுமா என்பதை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை இப்பதிவில் காணலாம்.

நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அன்று கிசான் சம்மன் நிதி என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயி குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 மூன்று தவணையாக பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகையானது விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மே மாதம் 14 ஆம் தேதி அன்று ரூ.2000 விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இதுவரை சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ.19 ஆயிரம் கோடி வரை இந்த திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் உங்களால் பணம் பெற முடியுமா என்பதை அறிந்து கொள்ள கீழுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

பிரதமர் கிசான் சம்மன் நிதி இணையதளமான pmkisan.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில் உள்ள Beneficiary Status என்னும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்கள் ஆதார் எண் அல்லது வங்கி கணக்கு எண் அல்லது உங்கள் மொபைல் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவு செய்ய வேண்டும்.

பின் Get Data என்னும் ஆப்ஷனை கிளிக் செய்தால் அதற்கான விவரங்களை உங்களால் காண முடியும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top