GOVT JOBS

மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000 வழங்கப்படும்’.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_80/fetchdata16/images/8f/19/c8/8f19c8fe220645b96e1950422758b33f485e8327070f1002a46d167c0941e9c7.jpg

   தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஊரடங்கு போடப்படுவதற்கு முன்னரே, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது. கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த கடைசி தேர்வில் கொரோனா அச்சத்தால், 32 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பதால் அதனை மீண்டும் எழுத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.இந்த நிலையில் 2019-2020 ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தோகை வழங்க அரசு ரூ.ரூ.107.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மாணவர் அவர்களது வங்கி கணக்குகளை உடனடியாக EMIS தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top