Social Activity

மாற்றுத் திறனாளிகள் நலம் திட்டம்

ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் மீட்புத் திட்டம்

மற்ற விவரங்கள்

ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோர்

எப்படி பெறுவது

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி 044-24719947 / 48 / 49

விரிவாக்கம்

மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மன நல மறுவாழ்வு மையங்கள் மற்றும் மன நல சிகிச்சை மருத்துவமனைகள் / இல்லங்களில் சேர்த்தல்

இயற்கை மரணம்

மற்ற விவரங்கள்

தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள்

எப்படி பெறுவது

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்.6 உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி 044-24719947 / 48 / 49

விரிவாக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கு இயற்கை மரணம் நேரிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.15,000/- வழங்கப்படும்.

இலவச கணினி பயிற்சி

மற்ற விவரங்கள்

plus 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

எப்படி பெறுவது

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி- 044-24719947 / 48 / 49

விரிவாக்கம்

கணினி பயிற்சி சென்னை பூவிருந்தவல்லியிலுள்ள NIVHல் (National Institute for Visually Handicapped) பார்வையற்றவர்களுக்கான 6 மாத கணினி பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதன்மூலம் அவர்கள் சிறுதொழில் பிரிவு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற இயலும். ஒவ்வொரு மாதமும் பயிற்சியாளர்களுக்கு ரூ.300/- உதவித் தொகை வழங்கப்படுகின்றது.

இலவச செல்போன் பயிற்சி

மற்ற விவரங்கள்

10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனுடைய நபர்கள் பயிற்சியளிக்கப்படும் பயிற்சி மையத்தின் உள்ளே ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தன்னிச்சையாக செல்லும் நிலையில் இருக்க வேண்டும்.

எப்படி பெறுவது

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி- 044-24719947 / 48 / 49

விரிவாக்கம்

செல்போன் பயிற்சி கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மூலம் 3 மாத செல்போன் பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் மாற்றுத் திறனாளிகள் சிறுதொழில் பிரிவு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற இயலும். ஒவ்வொரு மாதமும் பயிற்சியாளர்களுக்கு ரூ.300/- உதவித் தொகை வழங்கப்படுகின்றது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை

மற்ற விவரங்கள்

பாதிப்பின் சதவீதம் குறைந்தபட்சமாக 75 விகிதத்திற்கு மேல் இருத்தல் வேண்டும். வேறு எந்த திட்டங்களின் மூலம் மறுவாழ்வு பெற தகுதியற்றவராக இருத்தல் வேண்டும்.

எப்படி பெறுவது

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் – முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி – 044-24719947 / 48 / 49

விரிவாக்கம்

அரசுத் துறையின் எவ்வித உதவிகளாலும் மறுவாழ்வு பெற தகுதியற்ற கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ.1,000/- வீதம் அவரவர் வசிக்கும் இடத்திற்கே பண விடை அஞ்சல் மூலம் வழங்கப்பட்டு வருகிறது

கருப்புக் கண்ணாடிகள் மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள்

மற்ற விவரங்கள்

முழுவதுமாக பார்வையற்ற நபராக இருத்தல் வேண்டும்

எப்படி பெறுவது

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் – மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் – முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி – 044-24719947 / 48 / 49 மாவட்ட ஆட்சித் தலைவர்

விரிவாக்கம்

பார்வையற்றோர் சுலபமாகவும், சுதந்திரமாகவும் தனியாக சென்று வரவும், அவர்கள் சூரிய ஒளி மற்றும் ஈரப்பதத்தினால் பாதிக்கப்படுவதை தடுக்கவும் இத்துறையின் மூலம் கருப்புக் கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி உதவித் தொகை

மற்ற விவரங்கள்

2 திட்டத்தில் பயனடைய தகுதிகள் / நிபந்தனைகள் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள்

எப்படி பெறுவது

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்.6 உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி 044-24719947 / 48 / 49

விரிவாக்கம்

மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். அ) 10ம் வகுப்பு படிக்கும் தேர்ச்சி பெற்ற மகள் ரூ.1,000/- ஆ) 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் ரூ.1,000/- இ) 11ம் வகுப்பு படிக்கும் மகள் ரூ.1,000/- ஈ) 12ம் வகுப்பு படிக்கும் தேர்ச்சி பெற்ற மகள் ரூ.1,500/- உ) 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் ரூ.1,500/- ஊ) பட்டப் படிப்பு ரூ.1,500/- பட்டப் படிப்பு – விடுதி வசதியுடன் ரூ.1,750/- எ) பட்ட மேற்படிப்பு ரூ.2,000/- பட்ட மேற்படிப்பு – விடுதி வசதியுடன் ரூ.3,000/- ஏ) தொழிற் கல்வி பட்டப்படிப்பு ரூ.2,000/- தொழிற்கல்விபட்டப்படிப்பு-விடுதி வசதியுடன் ரூ.4,000/- ஐ) தொழிற் கல்வியில் பட்ட மேற்படிப்பு ரூ.4,000/- தொழிற் கல்வியில் பட்ட மேற்படிப்பு விடுதி வசதியுடன் ரூ.6,000/- ஒ) ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் ரூ.1,000/- ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் – விடுதி வசதியுடன் ரூ.1,200/-

கல்வி உதவித் தொகை 1 முதல் 5 வரை (ம) 6 முதல் 8 வரை

மற்ற விவரங்கள்

அ) 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.50/-ம் ஆ) 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.150/-ம் மாதா மாதம் நோட்டுப் புத்தகங்கள் வாங்க மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எப்படி பெறுவது

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி- 044-24719947 / 48 / 49

விரிவாக்கம்

அ) 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.50/-ம் ஆ) 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.150/-ம் மாதா மாதம் நோட்டுப் புத்தகங்கள் வாங்க மாற்றுத் திறனுடைய மாணவ, மாணவியர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கல்வி உதவித் தொகை 9 முதல் 12 வரை

மற்ற விவரங்கள்

அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்லூரி / பயிற்சி நிறுவனங்களில் பயில வேண்டும். முந்தைய வகுப்பில் குறைந்தது சராசரி 40 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எப்படி பெறுவது

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி- 044-24719947 / 48 / 49

விரிவாக்கம்

கல்வி உதவித்தொகை வகுப்பு 9-12 வரை ஆண்டுக்கு ரூ.2000/-ம், பட்டப் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.3,000/-, முதுநிலைப் பட்டப் படிப்பு, தொழிற் கல்வி, மருத்துவம், பொறியியல் தொழிற் கல்விக்கு ஆண்டொன்றுக்கு ரூ.3500/-ம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

காது கேட்கும் கருவிகள் மற்றும் சூரிய ஒளியினால் மின் சக்தி பெறும் பேட்டரிகள்

மற்ற விவரங்கள்

ஊனத்தின் சதவிகிதம் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். காது கேட்கும் தன்மையின் அளவு நிரந்தரமாக குறைவாக இருத்தல் வேண்டும். சிவில் உதவி மருத்துவர் தகுதி பெற்ற காது, மூக்கு, தொண்டை நிபுணரிடமிருந்து மருத்துவ சான்று பெற்று அளிக்க வேண்டும்.

எப்படி பெறுவது

விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் – மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் உதவிகள் வழங்கப்படும்போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர் – முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 600 078. தொலைபேசி – 044-24719947 / 48 / 49 மாவட்ட ஆட்சித் தலைவர்

விரிவாக்கம்

செவித் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றவர்களுடன் உரையாடும் வண்ணம் காது கேட்கும் கருவி மற்றும் சூரிய ஒளியினால் மின் சக்தி பெறும் பேட்டரியும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் துறை

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top