Uncategorized

மாவட்ட நீதிமன்றத்தில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3( முற்றிலும் தற்காலிகமானது) பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்ப வேண்டும். 

நிறுவனம்: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்

பணி: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3

காலியிடங்கள்: 10 

சம்பளம்: மாதம் ரூ.20,600 – 60,500 + இதர படிகள்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் சேர்வதற்கான தகுதி பெற்றிருத்த வேண்டும். அரசு தொழில்நுட்பத் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்துத் தேர்வு இரண்டிலும் அதாவது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை அல்லது தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை மற்றும் கணினி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 வயது நிறைவடைந்து 37 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யுப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து செய்முறை தேர்வு, நேர்முகத் தேர்வு, இட ஒதுக்கீடு விதியைப் பின்பற்றி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தகுதிபெற்ற விண்ணப்பத்தாரர்களைப் பொறுத்து 1:5 அல்லது புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிபதி, அவர்களது முடிவின் அடிப்படையில், விண்ணப்பத்தாரர்களின் எண்ணிக்கை முடிவு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  https://districts.ecourts.gov.in/pudukkottai என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், புதுக்கோட்டை மாவட்டம் – 622 001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.10.2021

மேலும் விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Notifiation%20-%20Recruitment%20for%20Steno%20Typists_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top