கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
பிரதமரின் உழவர் நிதி உதவி திட்டத்தின் கீழ் 6 கோடியே 93 லட்சம் விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் 2000 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமரின் உழவர் நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது இந்த தொகை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் என்கிற கணக்கில் செலுத்தப்படும்
ஒரு நாள் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் நாடு முழுவதும் ஆறு கோடியே 93 லட்சம் விவசாயிகளுக்கு ஜூன் மாதம் வழங்கவேண்டிய 2000 ரூபாய் முன்கூட்டி ஏப்ரல் மாதத்திலேயே அவர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது மொத்தம் 13 ஆயிரத்து 855 கோடி ரூபாய் செலுத்த பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.