தமிழக நலன் கருதி தேவைப்பட்டால் ரஜினியுடன் இணைவேன் என நடிகர் கமல்ஹாசன் மீண்டும் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகம் சென்றார். அங்கு சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசனுக்கு, நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் பேசிய அவர், “ பல வருடங்களாக மக்களிடம் இருந்து எனக்கு அன்பு கிடைக்கிறது. 5 வயது முதல் நடிப்பில் இருக்கிறேன். பலர் கை தூக்கி விட்ட நிலையில் தான் இந்த மேடையில் இருக்கிறேன். நெகிழ்ந்து இருக்கிறேன்.
தொண்டர்கள் அன்பு, செயல் வடிவமாக மாற வேண்டும். இது தமிழகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். என்னுடைய யாத்திரை வெற்றி பெறும். தேவைப்பட்டால் தமிழகத்தில் நலன் கருதி ரஜினியுடன் இணைவேன் என்றுதான் சொல்லியிருக்கிறோம். எப்போது இணைவோம் என்று தேதியெல்லாம் சொல்ல முடியாது. அப்படி இணையும்போது அதில் எங்கள் நட்பை விட முக்கியமான செய்தியாக தமிழகத்தின் நலன் இருக்கும் என்பதுதான்” என தெரிவித்தார்.
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் (NLM)கீழ் , இந்திய அரசு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (NLM-EDP)மூலம் கழுதை வளர்ப்பை ஊக்குவிக்கிறது . இத்திட்டத்தின்… Read More
டெல்லி: தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்க்கட்சிகள், அதிலும் குறிப்பாகத் தென்மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை… Read More
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல்… Read More
சென்னை: குமரியில் இன்று ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு… Read More
கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொது கூட்டத்திற்காக இன்று பா.ஜ.க சார்பில் பூமிபூஜை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க சார்பில் பூமிபூஜை தமிழ்நாட்டில் சட்டமன்றத்… Read More
தாமதமாக இறப்பைப் பதிவு செய்வதற்கான நடைமுறை விளக்கம் தாமதமாக இறப்பைப் பதிவு செய்வது – விரிவான வழிகாட்டி இறப்பு பதிவு… Read More