Advertisement

விவசாய பொருட்களை வாங்க மானிய விலையில் மத்திய அரசு புதிய அதிரடி திட்டம்

விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை மானிய விலையில் வாங்குவதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.

ஸ்மாம் கிசான் யோஜ்னா (SMAM Kisan Yojana) என்பதுதான் அந்தத் திட்டத்தின் பெயர்.

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவசாய உபகரணங்களை எளிதில் பெற மத்திய அரசு உதவுகிறது.

மேலும், அவற்றை 50% முதல் 80% வரை மானிய விலைகளில் விவசாயிகள் பெறவும் இந்தத் திட்டம் கைகொடுக்கிறது.

இந்த ஸ்மாம் கிசான் யோஜ்னா திட்டத்திற்காக ரூ.553 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.

பெண் விவசாயிகள் உள்பட நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். 

ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விவசாய நிலம் தொடர்பான ஆவணம், வங்கி பாஸ் புத்தகம், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, பேன் கார்டு, பாஸ்போர்ட் – இவற்றில் ஒன்று), ஜாதி சான்றிதழ் (SC/ST/OBC ஆகியோருக்கு மட்டும்) ஆகியவற்றுடன் இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

https://agrimachinery.nic.in/ என்ற இணையதளத்தில் நுழைந்து, அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பலன் பெறலாம்.

admin

Recent Posts

SBI வங்கி வேலைவாய்ப்பு 2026: 1500 PO காலியிடங்கள் அறிவிப்பு – Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | மாதம் ₹85,920 வரை சம்பளம் | உடனே விண்ணப்பிக்கவும் SBI PO Recruitment 2026

SBI PO Recruitment 2026: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI), 2026 ஆம் ஆண்டிற்கான… Read More

2 weeks ago

214 கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை: தமிழகத்தில் 214 முக்கிய கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்து… Read More

3 weeks ago

PMEGP / NEEDS SCHEME: தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன் || Tamil Nadu government subsidy loan 10L

PMEGP / NEEDS SCHEME: 35% மானியம் மற்றும் ரூ.10 லட்சம் வரையிலான கடனுதவிக்கு மத்திய அரசின் PMEGP (Prime… Read More

3 weeks ago

Govt Scheme: TVK 4000 Rupees Scheme Eligibility வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ.4,000 உதவித் தொகை.! இவர்களுக்கெல்லாம் கிடைக்காது? தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் என்ன?

TVK 4000 Rupees Scheme Eligibility: வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் திட்டம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான… Read More

4 weeks ago