Social Activity

100ள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க தமிழக அரசு ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

100ள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க தமிழக அரசு ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மார்ச் மாதம் பணியாற்றிய 26.84 லட்சம் பேருக்கு 2 நாள் சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மார்ச் 22 ந்தேதியில் இருந்து நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

யாரும் வீட்டை விட்டு, அல்லது தங்கும் இடங்களில் இருந்து வெளியே வரவேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மூடிக்கிடக்கின்றன. போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால் ஏராளமான பணியாளர்கள் ஊதியம் இன்றியும், வேலையை இழந்தும் தவித்து வருகின்றனர்.

பல நிறுவனங்கள் பணியாளர்களுக்கு ஊதியம் சரிவர வழங்கவில்லை என்றும், நடப்பு மாதத்துக்கு ஊதியம் தொடர்பான எந்த பதிலும் இல்லாத நிலையில் இலட்சக்கணக்கானோர் எதிர்காலம் கேள்விக்குரியதாக இருக்கிறது. இதில் 100 நாட்கள் வேலை பார்க்கும் பணியாளர்களும் அடங்குவர். ஊரடங்கு அமலில் இருப்பதால், நூறு நாள் வேலைத்திட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு முடிந்தவுடன், பணிகளை தொடங்குவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியத்தை சிறப்பு நிதியாக வழங்க தமிழக அரசு ரூ.123 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 2 நாட்களுக்கான ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த திட்டத்தின் கீழ் மார்ச் மாதம் வேலைபார்த்த 26 லட்சத்து 84 ஆயிரத்து 989 பேருக்கு இரண்டு நாள் ஊதியம் சிறப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக 123 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டப் பணியாளர்கள் வேலைக்குச் செல்லலாம், ஆனால் முகக் கவசம் அணிவதும் சமூக விலகளை கடைபிடிப்பதும் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top