Social Activity

12 ரூபாய் முதலீட்டில் ரூ.2 லட்சம் பெறலாம்… எப்படி?

ஆண்டுக்கு ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் வரை பயன்களை பெறுவதற்கான காப்பீட்டுத் திட்டம் பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா.

Pradhan Mantri Suraksha Bima YojanaPradhan Mantri Suraksha Bima Yojana

பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள மக்களுக்காக குறைந்த செலவில் காப்பீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்காக மத்திய அரசு சில காப்பீட்டு திட்டங்களை ஏற்கெனவே அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம். இத்திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு விபத்துக்கான காப்பீடும், விபத்தினால் ஏற்படும் உடல் ஊனத்திற்கும்

காப்பீடு வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.12 மட்டும் பிரீமியத் தொகையாக செலுத்தினால் போதும். 2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மூன்று முக்கிய சமூக பாதுகாப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று.

இத்திட்டத்திற்கு 18 வயது முதல் 70 வயது வரையிலானவர்கள் தகுதியானவர்கள். விண்ணப்பதாரர்களிடம் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆட்டோ-டெபிட் வசதிக்கான ஒப்புதலை தர வேண்டும். எல்.ஐ.சி போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களால் இந்தக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படுகிறது. மற்ற சில பொது காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளுடன் கூட்டணி அமைத்து இத்திட்டத்தை வழங்குகின்றன.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களை பொறுத்தவரையில், ஆதார் அட்டை மட்டுமே போதுமானது. மற்ற காப்பீட்டுத் திட்டங்களை பயன்படுத்தினாலும், கூடுதலாக இத்திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இத்திட்டத்தின் பயன்களை பொறுத்தவரையில், விபத்தால் உயிரிழந்தால் ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தால் முழுமையாக ஊனமடைந்தாலும் ரூ.2 லட்சம் வழங்கப்படும். விபத்தால் பாதி ஊனம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

விபத்தால் ஏற்படும் பிரச்சினைகள் மட்டுமே இத்திட்டத்தில் அடங்கும். இயற்கை மரணம், தற்கொலை உள்ளிட்டவற்றுக்கு இத்திட்டம் பொருந்தாது. இந்த காப்பீட்டுத் திட்டத்திலிருந்து வெளியேறும் நபர்கள் சில வருடங்களில் மீண்டும் இணைந்துகொள்ளலாம். எனினும், முந்தைய ஆண்டுகளுக்கான வருடாந்தர பிரீமியத் தொகையை செலுத்த வேண்டும். இதற்கான நிபந்தனைகளும் காப்பீட்டு நிறுவனத்தால் விதிக்கப்படும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top