Social Activity

50 ஆயிரம் செலவு செய்தல் 20 வருடம் மின்கட்டணம் செலுத்த வேண்டாம்

50 ஆயிரம் செலவு செய்தல் 20 வருடம் மின்கட்டணம் செலுத்த வேண்டாம்.
மானிய விலையில் சோலார் தகடுகளை அமைப்பது எப்படி
பேனலுக்கு மானியம் எப்படி பெறுவது?

தொகுப்பு, அடுக்குமாடி வீடுகளில் சூரிய சக்தி மின் அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.வீடுகளில் எவ்வளவு திறன் கொண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கலாம்?
ஒரு மாதத்திற்கு, 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டில், ஐந்து – ஆறு கிலோ வாட் திறன் கொண்ட, மின் நிலையம் அமைக்கலாம்.சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு செலவாகும்?
ஒரு கி.வா., பேட்டரி வசதியுடன் கூடிய, மின் நிலையம் அமைக்க, 1.50 லட்சம் ரூபாய்; ‘பேட்டரி’ இல்லாமல் இருந்தால், ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்.
அரசு மானியம் வழங்குகிறதா?
ஆம். தமிழக அரசு, ஒரு கி.வா., மின் நிலையம் அமைக்க, 50 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறது. இதில், மத்திய அரசு பங்கு, 30 ஆயிரம் ரூபாய். இதை பெற, சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ‘டெடா’ அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு, ஒரு கி.வா., அல்லது அதற்கு மேல் மின் நிலையம் அமைத்தால், தலா, ஒரு கிலோ வாட்டிற்கு, 20 ஆயிரம் ரூபாய், மானியம் வழங்குகிறது. இதை, சூரிய மின் சாதன தயாரிப்பாளர் மூலம் பெற்று கொள்ளலாம்.
பேட்டரியில் எவ்வளவு மின்சாரம் சேமிக்க முடியும்?
பகல் நேரத்தில், மின்சாரம் பயன்படுத்தாமல் இருந்தால், 80 சதவீத மின்சாரத்தை, பேட்டரியில் சேமிக்கலாம். இதன் மூலம், மோட்டார் பம்ப் தவிர்த்து, விளக்கு, பேன், ‘டிவி’, ‘ஏசி’ போன்ற சாதனங்களை இயக்கலாம்.
சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க எவ்வளவு இடம் தேவை?
ஒரு கிலோவாட் மின் நிலையத்திற்கு, 75 சதுர அடி இடம் தேவை.சூரிய சக்தி மின் நிலையத்திற்கு என்ன உபகரணம் பயன்படுத்தப்படுகிறது?
சூரிய மின் தகடு – பேனல், இன்வெர்டர், பேட்டரி ஆகியவை தேவை. பேட்டரி இல்லாத பட்சத் தில், ‘நெட்’ மீட்டர் பொருத்தி, சூரிய சக்தி மின்சாரத்தை, மின் வாரியத்திற்கு வழங்கலாம்.
மின் வினியோகம் எப்படி?
சூரிய மின் சக்தி மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம், பேட்டரிக்கு வந்து, ‘இன்வெர்டர்’ மூலம், மின் வினியோகம் செய்யப்படுகிறது.
சூரிய சக்தி மின் கட்டமைப்பு அருகில், வீட்டு உபயோக சாதனங்கள் இருக்கலாமா?
இருக்கலாம். மின் தகடுகளை தொட்டாலும், ‘ஷாக்’ அடிக்காது.சூரிய சக்தி கட்டமைப்பு அமைக்க, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியம் போன்ற அரசு நிறுவனங்களிடம் அனுமதி பெற வேண்டுமா?
வீடுகளில் அமைக்க, யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை.

Application
http://teda.in/pdf/CIS_Individual.pdf

Website Link
http://teda.in/programes/cms-solar-rooftop-capital-incentive-scheme/

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top