பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி நடித்த ‘சிவாஜி’ உள்பட பல திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தவரும் ‘காப்பான்’ உள்பட பல ஒரு சில திரைப்படங்களை இயக்கியவருமான கேவி ஆனந்த் அவர்களுக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக காலமானார். இதனால் திரைஉலகம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவேக்கை இழந்த திரையுலகம் அதிலிருந்து மீள்வதற்கு முன்னரே தற்போது கேவி ஆனந்த் அவர்களை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த 1995ஆம் ஆண்டு ‘தேன்மாவின் கொம்பத்து’ என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற கேவி ஆனந்த் அவர்கள் கடைசியாக சூர்யா நடித்த ‘காப்பான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார்.