Social Activity

உலகக்கோப்பை – இது மட்டும் நடந்தால் பாகிஸ்தான் அணிக்கு ஜாக்பாட்.. இந்தியா நிலை என்ன?

பெங்களூர் : 2023 உலகக்கோப்பை தொடரில் அதிர்ஷ்டம் கிடைக்குமா? என பாகிஸ்தான் அணி ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறது.

நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான போட்டி மழையால் கை விடப்பட்டால் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்கான வாய்ப்பு அதிகரிக்கும். அரை இறுதியில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணி ஆடப் போகிறது என்பதும் இந்தப் போட்டியில் மழை வருவதை பொறுத்தே அமையும்.

பெங்களூரில் நடைபெறும் நியூசிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறி உள்ளதுதான் இந்த எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய காரணம்.

ICC ODI World Cup 2023 Semi final : Rain could helps Pakistan to enter semi final

கடந்த நான்கு நாட்களாக பெங்களூரில் மழை பெய்து வருவதால் அங்கே மஞ்சள் நிற மழைக் கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 64.5 மில்லிமீட்டர் முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதனால், போட்டி தடைபட வாய்ப்பு உள்ளது.

அதே சமயம், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சிறப்பான மழைநீர் வடிகால் வசதிகள் உள்ளன. சிறிய மழை என்றால் அரைமணி நேரத்தில் ஆடுகளம் மீண்டும் போட்டிக்கு தயாராகி விடும் என கூறப்படுகிறது. ஆனால், பெருமழை பெய்தால் போட்டி கைவிடப்பட வாய்ப்பு அதிகம்.

அப்படி நடந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு கிடைக்கும். எப்படி என்றால், தற்போது இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்த நிலையில், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேற போட்டி நிலவுகிறது.

நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று அணிகளும் ஒரே மாதிரியாக 8 போட்டிகளில் ஆடி 8 புள்ளிகள் பெற்று உள்ளன. மூன்று அணிகளுக்கும் லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளன. அதில் நியூசிலாந்து அணி தன் கடைசி போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக ஆடுகிறது. இந்தப் போட்டியில் மழை வந்து போட்டி கை விடப்பட்டால் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு தலா 1 புள்ளி மட்டுமே வழங்கப்படும். அப்படி நடந்தால் நியூசிலாந்து அணி 9 புள்ளிகள் மட்டும் பெறும்.

மறுபுறம், பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெறும். தோல்வி அடைந்தால் அரை இறுதி வாய்ப்பை இழக்கும். அதே போல, ஆப்கானிஸ்தான் அணி, வலுவான தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் தோற்றால் அரை இறுதி வாய்ப்பு பறிபோகும்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தங்கள் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் 10 புள்ளிகள் பெற்று, நியூசிலாந்து அணியை முந்தி விடும். அப்போது ஆப்கானிஸ்தான் அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் பின் தங்கி இருப்பதால், பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்பு ஏற்படும்.

எனவே, நியூசிலாந்து அணி, இலங்கை அணியை வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்றால் மட்டுமே அரை இறுதி வாய்ப்பை எளிதாக்கிக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், பாகிஸ்தான் மற்றும், ஆப்கானிஸ்தான் அணிகள் தோல்வி அடைந்தால் மட்டுமே அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கும்.

பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, நியூசிலாந்து அணி தற்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னணியில் இருப்பதால், அந்த அணி 9 புள்ளிகள் மட்டும் பெற்றால் பாகிஸ்தான் அணி வெற்றியை பெற்று அரை இறுதிக்கு முன்னேறும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைக்கும். அப்படி நடந்தால் இந்திய அணியுடன், பாகிஸ்தான் அணி அரை இறுதியில் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top