cinima news

Leo: “லியோவில் தியேட்டரை தெறிக்கவிடப்போகும் சீன் இதுதான்..” விஜய் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்த பிரபலம்

லியோவில் தியேட்டரை தெறிக்கவிடப் போகும் சீன்: விஜய்யின் கேரியரில் இதுவரை இல்லாத அளவிற்கு அவர் நடித்துள்ள லியோ படத்துக்கு எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முழுக்க முழுக்க மாஸ் ஹீரோவாக மாறிவிட்ட விஜய்க்கு, லியோ வேற லெவலில் கம்பேக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதால் அதன் ஹைப் இன்னும் அதிகரித்துள்ளது.

லியோவில் தியேட்டரை தெறிக்கவிடப் போகும் சீன்: விஜய்யின் கேரியரில் இதுவரை இல்லாத அளவிற்கு அவர் நடித்துள்ள லியோ படத்துக்கு எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முழுக்க முழுக்க மாஸ் ஹீரோவாக மாறிவிட்ட விஜய்க்கு, லியோ வேற லெவலில் கம்பேக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதால் அதன் ஹைப் இன்னும் அதிகரித்துள்ளது.

இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் நான் ரெடி பாடலை தொடர்ந்து சஞ்சய் தத், அர்ஜுன் பிறந்தநாளில் அவர்களது க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி மாஸ் காட்டியது. சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அதேபோல், அர்ஜுன் பிறந்தநாள் தினத்தில் அவரது ஹரால்டு தாஸ் கேரக்டரின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இருவரின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களுக்கு படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இவர்கள் தவிர விஜய், கெளதம் மேனன்,மிஷ்கின் என இன்னும் ஏராளமான பிரபலங்கள் லியோவில் நடித்துள்ளனர். அதனால், அவர்களது கேரக்டர் க்ளிம்ப்ஸ் வீடியோக்களும் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், லியோ படத்தின் இடைவேளை காட்சி குறித்து தயாரிப்பாளர் லலித் குமார் பேசியது வைரல

இடைவேளைக்கு முந்தைய சுமார் 10 நிமிடங்கள் ரசிகர்களுக்கான ஆக்‌ஷன் ட்ரீட் கன்ஃபார்ம் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இன்னொரு மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது. விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் மூவரும் லியோவில் எப்போது சந்தித்துக்கொள்வார்கள் என்பது குறித்து ஸ்டண்ட் மாஸ்டர் தவசி கூறியுள்ளார். அதாவது, விஜய், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத் மூவரும் சந்திக்கும் சீன் தான், லியோவில் பக்கா தியேட்டர் ப்ளாஸ்டர் என தெரிவித்துள்ளார்.

மூன்று மெஹா ஹீரோக்களும் ஸ்க்ரீனில் முதன்முறை சந்திக்கும் இந்த சீன், ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என ஸ்டண்ட் மாஸ்டர் தவசி கூறியுள்ளார். விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மூவரும் சந்திக்கும் காட்சியை விடவும், இது இன்னும் மாஸ் என அவர் சீக்ரெட் அப்டேட் கொடுத்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. அதேபோல், க்ளைமேக்ஸ் காட்சியிலும் லியோவில் இன்னும் சர்ப்ரைஸ்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top