TNPSC 193 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.1,13,500/- | முழு விவரங்களுடன்!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவை துறையில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Computor–cumvaccine store keeper, Block Health Statistician, Statistical Assistant ஆகிய பதவிகளுக்கு 100 க்கு மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
நிறுவனம் | TNPSC |
பணியின் பெயர் | Combined Statistical Subordinate Service Examination |
பணியிடங்கள் | 193 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
Combined Statistical Subordinate Service பணிகளில் மொத்தமாக 193 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Computor–cum vaccine store keeper – 30 பணியிடங்கள்
- Block Health Statistician – 161 பணியிடங்கள்
- Statistical Assistant – 2 பணியிடங்கள்
வயது வரம்பு :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் அதிகபட்சம் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பிரிவிற்கான வயது தளர்வுகளை அறிவிப்பில் காணலாம்.
TNPSC கல்வித்தகுதி:
- Computor–cum vaccine store keeper – Degree in Statistics அல்லது Degree in Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் Statistics பணிகளில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Block Health Statistician – Statistics அல்லது Mathematics அல்லது Economics பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Statistical Assistant – Mathematics அல்லது Statistics Masters degree பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் computer statistical tools அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
TNPSC ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு செயல்முறை :
- பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
- இந்த தேர்வு ஆனது Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது.
- இந்த தேர்வுகள் வரும் 09.01.2022 அன்று நடைபெறவுள்ளது.
CESSE கட்டண விவரம்:
- பதிவு கட்டணம் – ரூ.150/-
- தேர்வு கட்டணம் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.10.2021 அன்று முதல் வரும் 19.11.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.