மழை
பல பகுதிகளில் மழை
கர்நாடக கடலோர மாவட்டமான மங்களூர், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள், குடகு, ஷிமோகா உள்ளிட்டவற்றிலும், தென் கர்நாடக மாவட்டங்களான பெங்களூர், மண்டியா, மைசூரு, ராமநகர் உள்ளிட்டவற்றிலும் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. இன்றும் இதமான சூழல் நிலவிவருகிறது. தமிழகத்திலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
காற்றின் வேகம்
தூரத்திலுள்ள புயல்
எங்கோ, வங்க கடலில் புயல் இருந்தாலும் கூட, பல கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தெற்கு கர்நாடகா, வடக்கு தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்டவற்றில் சூறாவளி காற்று சுழன்று அடித்ததை பார்க்க முடிந்தது. இந்த காற்றின் வேகம், தெலுங்கானா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இன்னமும் அதிகமாக இருக்கிறது.
பரபரப்பு வீடியோ
காற்றால் இழுக்கப்படும் பஸ்
தெலுங்கானா மாநிலம் கம்மம் என்ற பகுதியில் ஓடிக்கொண்டு இருந்த ஒரு தனியார் சொகுசுப் பேருந்து, கடும் சூறாவளி காற்றின் காரணமாக பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ செல்போனில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது.