தமிழக அரசினால் நடத்தப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தகவல்கள்
https://www.omcmanpower.com/
முதல் பட்டதாரி சான்றிதழ் எப்படி பெறுவது என்பதன் விவரங்களை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். முதல் பட்டதாரி சான்றிதழ் எப்படி பெறுவது என்ற விவரம் சிலருக்கு தெரியாமல் இன்றும் இருக்கிறது. அந்த வகையில் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும். முதல் பட்டதாரி சான்றிதழ் இருந்தால் அரசாங்கத்தின் மூலம் நிறைய ஊக்கத்தொகைகள் கிடைக்கும். அடுத்து கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் சேருபவர்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளவர்களுக்கு கல்வி கட்டணத்தில் சலுகை அளிக்கப்படும்.
அடுத்து நேரடியாக டிப்ளமோ இரண்டாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் மூலம் ரூ.40,000/- வரை கல்வி கட்டணம் குறைத்து சலுகை வழங்கப்படுகிறது. மருத்துவ துறையில் படிக்கும் மாணவர்களுக்கு 1.25 லட்சம் வரை முதல் பட்டதாரி சான்றிதழ் உள்ளவர்களுக்கு கட்டணம் குறைக்கப்படுகிறது. சரி வாங்க நண்பர்களே இப்போது முதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் எப்படி பெறுவது என்ற முழு விவரங்களை படித்தறிவோம்..!
ஆன்லைன் மூலம் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:
முதல் பட்டதாரி சான்றிதழ் அப்ளை செய்வதற்கு உங்களுடைய குடும்பத்தில் டிகிரி முடித்தவர்கள் இருக்க கூடாது. அதாவது உங்களுடைய பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா இவர்களில் யாரேனும் டிகிரி முடித்திருந்தால் நீங்கள் இந்த முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்க முடியாது.
பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram” சேனல Join” பண்ணுங்க:
அடுத்து உங்களுடைய அண்ணன், அக்கா யாரேனும் டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்க முடியாது. உதாரணத்திற்கு தம்பி, தங்கையோ தற்போது படித்து கொண்டிருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணம்:
விண்ணப்பிக்க போகும் அவர்களுடைய போட்டோ, ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, டிசி(Transfer Certificate), 10/12 மதிப்பெண் சான்றிதழ், வீட்டில் இருக்கும் நபர்களின் படித்த டிசி இருக்க வேண்டும்.