கொரோனா தொற்றால் பாதிப்படைய இரத்த வகை முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்ற உண்மையை 23 and Me என்ற மரபணு சோதனை நிறுவனம் சமீபத்திய ஆய்வுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.பாதிப்புக்கு உள்ளான 7.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் தரவுகளை வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கையை குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருசிலர் மாத்திரம் ஏன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கிறார்கள்? மற்றவர்களுக்கு ஏன் குறைவான அறிகுறி உள்ளது? சிலர் ஏன் அறிகுறி இல்லாமல் இருக்கிறார்கள்? இதற்கு விடை அந்த நபரின் குருதி வகையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இதன்படி ஓ குருதி வகையினை உடையவர்கள் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக உள்ளனர்.ஆனால் ஏ குருதி வகையினை உடையவர்களுக்கு கொரோனா தாக்கினால் கடுமையான சிக்கல்களை சந்திப்பதுடன் உயிருக்கும் ஆபத்து நேரிடலாமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.இதேவேளை சீன, இத்தாலி மற்றும் ஸ்பெயினில் ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாருக்கு கொரோனா எளிதாக தாக்கும்?.. ஆராய்ச்சி முடிவு!
By
Posted on