கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் முன் களப் பணியாளர்களுக்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி குரனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இவர்களில் உயிர் இழப்பு ஏற்படுகின்றன இவர்கள் இழப்புக்காக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் ஆலோசனை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
இதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது தமிழக அரசு மட்டும் இல்லாமல் அனைத்து கட்சி அனைத்து கட்சி வரவேற்றுள்ளது.
இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள வேலை வாய்ப்பகங்களில் 2017,2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில்(01.01.2017 முதல் 31.12.2019 ) வரை வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிபந்தனைகளுடன் சலுகைகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, புதுப்பிக்க தவறியவர்கள் இன்று (29.5.2021)முதல் மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் எனவும், இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மூன்று மாதங்களுக்கு பின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதோடு, 01.01.2017க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.