விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்களை மானிய விலையில் வாங்குவதற்கான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
ஸ்மாம் கிசான் யோஜ்னா (SMAM Kisan Yojana) என்பதுதான் அந்தத் திட்டத்தின் பெயர்.
இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விவசாய உபகரணங்களை எளிதில் பெற மத்திய அரசு உதவுகிறது.
மேலும், அவற்றை 50% முதல் 80% வரை மானிய விலைகளில் விவசாயிகள் பெறவும் இந்தத் திட்டம் கைகொடுக்கிறது.
இந்த ஸ்மாம் கிசான் யோஜ்னா திட்டத்திற்காக ரூ.553 கோடியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது.
பெண் விவசாயிகள் உள்பட நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், விவசாய நிலம் தொடர்பான ஆவணம், வங்கி பாஸ் புத்தகம், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டை, பேன் கார்டு, பாஸ்போர்ட் – இவற்றில் ஒன்று), ஜாதி சான்றிதழ் (SC/ST/OBC ஆகியோருக்கு மட்டும்) ஆகியவற்றுடன் இத்திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
https://agrimachinery.nic.in/ என்ற இணையதளத்தில் நுழைந்து, அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்து பலன் பெறலாம்.